சிக்கலுக்கு உள்ளான சல்லியர்கள் திரைப்பட வெளியீடு: மனம் திறந்த குட்டிமணி
ஈழப் போராட்ட வரலாற்றில் மருத்துவ போராளிகள் பற்றிய திரைப்படமான சல்லியர்கள் திரைப்படத்தின் வெளியீட்டில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
சிறிய முதலீடுகளில் எடுக்கும் திரைப்படங்கள் பெரிதாக பிரபலமடையாது என ஒரு கருத்தியலை கொண்டுள்ள சமூகத்தில் முன்னெடுக்கப்படும் புறக்கணிப்புக்கள் சல்லியர்கள் திரைப்படத்தையும் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி குறித்த திரைப்படத்தில் உள்ள கருப்பொருளான ஈழமண் வரலாறும் இந்த புறக்கணிப்புக்கான ஒரு காரணம் எனவும் நம்பப்படுகிறது, குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்த படத்திற்கு திரையரங்குகள் தராமல் அலைக்கழித்தமையும் ஒரு கவலைக்குறிய விடயமாகியுள்ளது.
இந்நிலையில் ஒரு சமூகத்தின் பாரம்பரியம், போராட்டம் என்பவற்றை தொகுத்துள்ள இந்த திரைப்படத்தின் வெளியீடு தொடர்பில் எழுந்த சவால்கள், சர்ச்சைகள் குறித்து நடிகர் குட்டிமணி வெளியிட்ட கருத்துக்களை தொகுத்து வருகிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |