வாகன சாரதிக்கு அடித்த அதிர்ஷ்டம் - கனவால் கிடைத்த பாரிய வெற்றி..!
Lottery
Canada
By Kiruththikan
கனடாவில் நபர் ஒருவருக்கு கனவில் தோன்றிய இலக்கங்களைக் கொண்டு லொத்தர் சீட்டிலுப்பில் விளையாடி பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.
ஒன்றாரியோ மாகாணத்தின் பர்லிங்டன் பகுதியையைச் சேர்ந்த மைக்கல் டேய்லர் என்ற 50 வயதான சாரதியே இவ்வாறு பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக இவர் லொத்தர் சீட்டிலுப்பு விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு லட்சம் டொலர் பணப்பரிசு
இறந்த தனது தந்தை கனவில் தோன்றியதாகவும் அவர் கூறிய இலக்கங்களைக் கொண்டு லொத்தர் சீட்டு விளையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
லொத்தர் சீட்டிலுப்பில் டெய்லர் ஒரு லட்சம் டொலர் பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.
இந்த லொத்தர் சீட்டிலுப்பு வெற்றி பெரு மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி