ஈரானை மீண்டும் சிதைக்க தயாரான அமெரிக்கா! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
ஈரானை அமெரிக்கா மிகக் கடுமையாகத் தாக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடங்கியது.
இதற்குப் பதிலடியாக, அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது.
தொடரும் தாக்குதல்கள்
இவ்வாறு இரு தரப்பும் இரவு நேரத்தில் மாறி மாறித் தாக்குதல்களை நடத்தியுள்ள சூழலில், ஈரானை அமெரிக்கா மிகக் கடுமையாகத் தாக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று தங்களால் ஈரான் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், இன்றும் அந்தத் தாக்குதல்கள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஜனாதிபதியின் அறிவிப்பு
ஈரான் இராணுவ ரீதியாக முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய ட்ரம்ப், ஒரு சிறந்த உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைக்கு அவர்கள் அதிக காலம் எடுத்துக்கொண்டதால், தற்போது அதற்கான விலையைச் செலுத்த நேரிடும் என்றும் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது அழுத்தத்திற்கும் எதிராக ஈரான் உறுதியுடன் நிற்கும் என்று அறிவித்துள்ளார்.
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 8 மணி நேரம் முன்