கனடா - மெக்சிகோ மீதான வரி விதிப்பு: ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு
கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இந்த இரு நாடுகளுக்கும் இன்று முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 25 சதவீத வரி ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரி விதிப்பு
இதேவேளை, எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க மெக்சிகோவும் கனடாவும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா, மெக்சிக்கோ மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அறிவித்ததனை அடுத்து ஆசியப் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளன.
மேலும், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்குச்சந்தையின் குறியீடுகள் சரிவை கண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |