ஈரான் விவகாரத்தில் அமெரிக்க சந்தித்துள்ள நெருக்கடி! பிரசார மேடையில் ட்ரம்ப் வெளிப்படை
ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா வரம்பு மீறிவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொலான்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமின்றி பேச்சுவார்த்தைகளை நடத்தக்கூடிய அதிகாரிகளை அடையாளம் காண்பதில் வொஷிங்டன் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தலைவர்களிடம் நாம் வரம்பு மீறிச் சென்றுவிட்டோம் ஏனென்றால் நாம் யாரைக் கையாளுகிறோம் என்றே நமக்குத் தெரியவில்லை என ஓஹியோவின் யங்ஸ்டவுனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் தெரிவித்தார்.
வரம்பு மீறிவிட்டோம்
ஈரானின் ஜனாதிபதியாக இருக்க யாரும் விரும்பவில்லை. சாத்தியமான வேட்பாளர்கள் அப் பதவியை ஏற்க தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் மசூத் பெஷெஷ்கியன் 2024 ஜூலை முதல் ஈரானின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

உண்மையைக் கூறப்போனால் யாரைக் கையாள்வது என்பதை தீர்மானிப்பதில் நாங்கள் மிகவும் சிரமப்படுகின்றோம். நாம் வரம்பு மீறிவிட்டோம் என நான் நினைக்கிறேன்.
ஈரான் தனது விமானப் படையையும் அதன் 159 கப்பல்களையும் இழந்தவிட்டது என்றும் அவை தற்போது கடலின் அடியில் அழகாக ஓய்வெடுக்கின்றன எனவும் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.
வளைகுடாப் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 1 முதல் இதுவரையில் கப்பல்கள் மீது குறைந்தது 19 தாக்குதல்கள் நடந்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) அமைப்பு பதிவு செய்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |