உக்ரைன் - ரஷ்ய போர் நிறுத்தம்! புடினை தலையசைக்க வைத்து ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலையீட்டின் பேரில், உக்ரைன் – ரஷ்யா இடையே ஒரு வார கால போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
உக்ரைனில் நிலவும் கடும் குளிர் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அவதி காரணமாக, தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
புடினின் தனிப்பட்ட கோரிக்கை
இதேவேளை, கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த வேண்டாம் என தான் தனிப்பட்ட முறையில் புடினிடம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Trump “asked” Putin not to bomb Kyiv—for just one week—because of cold weather. Civilians shouldn’t rely on dictators’ moods or Trump’s personal favors. This is not leadership. It’s dangerous appeasement. #freecitizensnetwork #usnews pic.twitter.com/QcxN1uxAFB
— Free Citizens (@free_citizens1) January 29, 2026
இந்த போர் நிறுத்தம் 7 நாட்கள் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிர் மற்றும் உள்கட்டமைப்பு சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு இது முக்கிய நிவாரணமாக பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |