சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்: விவாதத்தில் களமிறங்கும் பைடன் மற்றும் ட்ரம்ப்
அமெரிக்க (United States) அதிபர் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களான தற்போதைய அதிபர் ஜோ பைடன் (Joe Biden) மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆகியோர் விவாதத்தில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த விவாதமானது இன்று(27) இரவு 09 மணிக்கு ஜோர்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெறவுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 05 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.
இஸ்ரேலின் போர்
அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று (27) நடைபெற உள்ளது.
குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் தொடர்பான விவகாரங்கள், ரஷ்யா (Russia) உக்ரேன் (Ukraine) போர் மற்றும் காசாவில் (Gaza) இஸ்ரேலின்(Israel) போர் பற்றிய கேள்விகள், சீன (China) விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |