அமெரிக்க சட்டத்திற்கு எதிராக ட்ரம்ப் குற்றச்சாட்டு
மூன்றாவது முறையாக நான் அமெரிக்க ஜனாதிபதி ஆவதை அமெரிக்க சட்டம் தடை செய்வது மிகவும் மோசமானது என அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை மூன்றாவது முறையான ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் மற்றும் அவர் அதை மிகவும் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இருப்பினும், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 22 ஆவது திருத்தத்தின்படி யாரும் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
உச்சி மாநாடு
இந்தநிலையில், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்காக டொனால் ட்ரம்ப் தென்கொரியா செல்கின்றார்.

இதன்போது மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் டொனால்ட் ட்ரம்பிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமெரிக்காவின் சட்டம்
இதற்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், “நான் உண்மையில் அதை பற்றி யோசிக்கவே இல்லை.

இதுவரை நான் பெற்ற ஓட்டு சதவீதத்தில் இப்போது அதிக ஓட்டு சதவீதம் பெற்றிருக்கிறேன் எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
அமெரிக்காவின் சட்டம் மூன்றாவைது முறையாக ஒருவர் ஜனாதிபதியாக போட்டியிடுவதை தடை செய்கின்றது, இது மிகவும் மோசமானது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 14 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்