ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்...! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணை தற்போது முழுமையாக அமெரிக்கக் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், தங்கள் தலைவர் யார் என்பதைக் கண்டறியவே ஈரான் மிகவும் சிரமப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர்க்களத்தில் படுதோல்வி
போர்க்களத்தில் படுதோல்வியைச் சந்தித்து வரும் தீவிரப்போக்குடையவர்களுக்கும், ஓரளவுக்கு மதிப்பைப் பெற்று வரும் மிதவாதிகளுக்கும் இடையே நடக்கும் இந்த உள்கட்சிப் பூசல் பைத்தியக்காரத்தனமானது எனவும் ட்ரம்ப் சாடியுள்ளார்.
அதேவேளையில், ஹார்முஸ் நீரிணை தற்போது முழுமையாக அமெரிக்கக் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ட்ரம்ப் உரிமை கோரியுள்ளார்.
அமெரிக்கக் கடற்படையின் அனுமதி இன்றி எந்தவொரு கப்பலும் அந்தப் பகுதிக்குள் உள்ளே நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், ஈரான் ஒரு முறையான ஒப்பந்தத்திற்கு வரும் வரை ஹார்முஸ் நீரிணை மிக இறுக்கமாக முடக்கப்பட்டுள்ளது என அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |