பாலியல் வன்புணர்வு வழக்கு -டொனால்ட் டிரம்ப் குற்றவாளி -நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பாலியல் வன்புணர்வு வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் இதில் பல மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் E Jean Carroll என்பவர் முன்னெடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இழப்பீடாக 3 மில்லியன் டொலர் அளிக்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார்
வன்புணர்வில் ஈடுபட்டார் என்பதை நீதிமன்றம் உறுதி செய்திருந்தாலும், டொனால்ட் டிரம்ப் பலாத்காரத்தில் ஈடுபட்டார் என்பதை ஏற்க நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் மறுத்துள்ளது.
E Jean Carroll என்பருக்கு அளிக்கப்படவிருக்கும் 3 மில்லியன் டொலர் இழப்பீடு தொகையில் 2.7 மில்லியன் டொலர் இழப்பீடாகவும் 280,000 டொலர் தண்டனை செலவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்ப்பானது அவமானம்
நியுயோர்க் நகரத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் நடுவர் மன்ற விவாதத்தின் முதல் நாளில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. விசாரணையின் போது பங்கேற்காத டொனால்ட் டிரம்ப், கரோலை ஒருபோதும் பாலியல் துஸ்பிரயோகம் செய்யவில்லை என்றும் அவரை அறிந்திருக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த தீர்ப்பானது அவமானம் என்று தமது சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
