உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு ட்ரம்ப் வைத்த முற்றுப்புள்ளி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உடல்நிலை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கின்றேன்.
மருத்துவர்கள்
கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவை விட அதிக வீரியம் கொண்ட ஆஸ்பிரின் மாத்திரைகளை உட்கொண்டு வருகின்றேன்.
தனது இதயம் வழியாக தடிமனான இரத்தம் செல்வதை நான் விரும்பவில்லை. அதனால் தான் இரத்தத்தை மெலிதாக்க அதிக ஆஸ்பிரின் எடுக்கிறேன்," என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தனது கைகளில் காணப்படும் காயங்கள் மற்றும் தழும்புகளை மறைக்க ஒப்பனை (Makeup) பயன்படுத்துவதாகவும் மற்றும் இது ஆஸ்பிரின் பயன்பாட்டினால் ஏற்படும் பக்கவிளைவு (Bruising) என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் தான் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனை குறித்து கருத்து தெரிவித்த அவர், அது எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் அல்ல மாறாக ஒரு சி.டி (CT) ஸ்கேன் மட்டுமே என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், உடற்பயிற்சி செய்வது தனக்கு சலிப்பை தருவதால் கோல்ஃப் விளையாடுவதைத் தவிர வேறு எவ்வித முறையான உடற்பயிற்சிகளையும் தான் செய்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 17 மணி நேரம் முன்