வார இறுதியில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!
ஈரான் மீது வரும் வார இறுதியில் அமெரிக்கா இராணுவத் தாக்குதலை நடத்த சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் துருக்கிக்கான அமெரிக்கத் தூதர் டாம் பராக் (Tom Barrack) கூறியிருந்த கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) முற்றிலும் மறுத்துள்ளார்.
ஃப்ளோரிடாவில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், அப்படியொரு திட்டம் இருக்குமானால் அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்து இக் கூற்றை நிராகரித்துள்ளார்.
இராணுவத் தாக்குதல்
தூதர் டாம் பராக் விடுத்த எச்சரிக்கை குறித்து நிருபர்கள் கேட்டபோது, அவர் துருக்கிக்கான எனது தூதர் அவர் மிக அதிகாரம் படைத்த மனிதர் என்று நினைக்கிறேன் என கிண்டலாகப் பதிலளித்த ட்ரம்ப், அத்தகைய கணிப்புகளை வெளியிடுவதற்கான அதிகாரம் அல்லது தகுதி பராக்கிற்கு இல்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வார இறுதி இராணுவத் தாக்குதல் தொடர்பான எவ்விதத் திட்டமும் தனது கவனத்திற்கு வரவில்லை என்றும் அது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னர் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தப்பட மாட்டாது என வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் வாஷிங்டனில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானுடனான போரை நம்மால் மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் ஆனால் அதனை உடனடியாக முடிப்பது நல்லதா அல்லது பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானை அப்படியே பலவீனமடைய விடுவது நல்லதா என்பது குறித்தே சிந்தித்து வருகிறோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |