நெருங்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : குப்பை வண்டியை ஓட்டி ட்ரம்ப் பிரசாரம்

Donald Trump United States of America Kamala Harris Election
By Sumithiran Oct 31, 2024 09:18 PM GMT
Report

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்(donald trump), குப்பை வண்டியை ஓட்டி வந்து தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்(kamala hariris) மற்றும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை(joe biden) அவமதித்துள்ளார்.

 ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நடைபெற்ற இறுதிக்கட்ட பேரணியில் உரையாற்றுவதற்காக டிரம்ப் விஸ்கான்சின் வந்தடைந்தார்.அங்கு அவர், துப்புரவுத் தொழிலாளி போல் உடையணிந்து, குப்பை வண்டியை ஓட்டிக்கொண்டு, விஸ்கான்சினில் உள்ள கிரீன் பேயில் உள்ள ஆஸ்டின்-ஸ்ட்ராபிள் சர்வதேச விமான நிலையத்தில் தனது விமானத்தில் இருந்து வந்தார்.

டிரம்பைப் பார்ப்பதற்காக விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் 

டிரம்பைப் பார்ப்பதற்காக விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் காத்திருந்தபோது டிரம்ப் விமானத்தில் இருந்து இறங்கி குப்பை வண்டியில் ஏறினார். டிரம்பிற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சார ஸ்டிக்கர்களால் குப்பை வண்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நெருங்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : குப்பை வண்டியை ஓட்டி ட்ரம்ப் பிரசாரம் | Trump Drives A Garbage Truck

குப்பை வண்டி வட்டமாகச் சென்று, செய்தியாளர்களை நெருங்கியது, டிரம்ப் ஓட்டுநர் இருக்கையில் இருந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ​​ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோரை டிரம்ப் அவமதித்தார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி : ரணிலுக்கு காத்திருக்கும் ஆபத்து

மத்திய வங்கி பிணைமுறி மோசடி : ரணிலுக்கு காத்திருக்கும் ஆபத்து

டிரம்ப் மற்றும் டிரம்பின் ஆதரவாளர்களை பயனற்ற 'குப்பை' 

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5ம் திகதி நடக்கிறது. டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் தற்போது தங்களது கடைசி தேர்தல் பேரணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பேரணியில், கமலாவை ஆதரித்து அவருடன் இணைந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், டிரம்ப் மற்றும் டிரம்பின் ஆதரவாளர்களை பயனற்ற 'குப்பை' என்று அழைத்தார்.

நெருங்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : குப்பை வண்டியை ஓட்டி ட்ரம்ப் பிரசாரம் | Trump Drives A Garbage Truck

இதுவே டிரம்பின் கோபத்திற்கு காரணம். 'ஆம், நாங்கள் குப்பைகள், அதனால்தான் இந்த குப்பை வண்டியை ஓட்டுகிறேன்' என்று குப்பை வண்டியின் சாரதி இருக்கையில் இருந்து செய்தியாளர்களிடம் டிரம்ப் விளக்கினார். டிரம்ப் பின்னர் விஸ்கான்சினில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார், அங்கு அவர் துப்புரவு தொழிலாளி போல் உடையணிந்திருந்தார்.

அதிரடியாக குறைக்கப்பட்டது மகிந்தவின் பாதுகாப்பு

அதிரடியாக குறைக்கப்பட்டது மகிந்தவின் பாதுகாப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025