ஈரானை நோக்கிப் பாயும் அமெரிக்கக் கடற்படை: ட்ரம்பின் அதிரடிப் போர் மிரட்டல்
அணுசக்தித் திட்டத்திற்கான புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் சம்மதிக்காவிட்டால், அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானுடன், 2015இல் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, 2018இல் அமெரிக்கா விலகியது.
பொருளாதாரத் தடை
இதைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை மற்றும் அணு ஆயுதம் தயாரிப்பதாகத் தெரிவித்துத் தாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது.
இந்தநிலையில், அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி, ஈரானுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது.

இதன்படி, மேற்காசிய நாடான ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பேச்சுவார்த்தை நடந்தது.
இது நேரடியாக இல்லாமல், ஓமன் வெளியுறவுத் துறை அமைச்சர் சயீத் பத்தர் பின் ஹமத் அல் புசைதியுடன், அமெரிக்க மற்றும் ஈரான் பிரதிநிதிகள் தனித்தனியாகப் பேச்சு நடத்தினர்.
பிரமாண்டக் கடற்படை
இது குறித்துத் தற்போது கருத்துத் தெரிவித்துள்ள ட்ரம்ப், “புதிதாக ஒரு ஒப்பந்தத்தை எட்ட வேண்டிய கட்டாயத்தில் ஈரான் உள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்காவிட்டால் அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்பது ஈரானுக்குத் தெரியும்.

கடந்தாண்டு ஜூனில், ஈரானின் அணுசக்தித் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை விட இது மிகக் கடுமையானதாக இருக்கும்.
தற்போது, அமெரிக்காவின் பிரமாண்டக் கடற்படை ஈரானை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
ஈரான் சரியான முடிவை எடுக்காவிட்டால், இராணுவத் தாக்குதல் நடத்தத் தயங்க மாட்டோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 12 மணி நேரம் முன்