ஈரான் தலைவர்களுடன் நேருக்கு நேர் சந்திப்புக்கு ட்ரம்ப் அழைப்பு
ஈரான் போர் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஒரு திருப்புமுனையை எட்ட முடியும் என்றால், ஈரானியத் தலைவர்களைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டு வார கால போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சமீபத்திய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குத் தூதுக்குழுவை அனுப்பப் போவதில்லை என்று தெஹ்ரான் கூறியுள்ள சூழலில் அவரது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
சமீபத்திய சுற்றுப் பேச்சுவார்த்தைகளைப் புறக்கணிப்பதாக ஈரான் விடுத்த அச்சுறுத்தல்களையும் தான் நிராகரிப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரச்சினையும் இல்லை
மேலும், "அவர்களைச் சந்திப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

தீவிரமான பேச்சுவார்த்தைகளுக்காக ஈரான் அரசு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் இந்த நிலையில் யாரும் விளையாட்டுக் காட்டவில்லை என நான் கருதுகிறேன் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் புதன்கிழமை மாலை காலாவதியாகவிருந்த நிலையிலும், நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைக் குழுவான துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஏற்கனவே பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுவிட்ட நிலையிலும் இந்த முன்மொழிவு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |