சீன - அமெரிக்கா இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பம்
கோலாகலமான வரவேற்பு விழாவைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் மற்றும் ட்ரம்ப் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
சீனாவின் 'கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்' மாளிகையில் சற்று நேரத்திற்கு முன்னர் இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள், பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் பிராந்திய அரசியல் நிலவரங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அதிகாரிகள் குழு
சீன அரச தொலைக்காட்சியின் செய்தியின்படி, இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி ட்ரம்புடன் அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் குழுவொன்று இணைந்து கொண்டுள்ளது.

அந்தப் பட்டியல் மார்கோ ரூபியோ - இராஜாங்கச் செயலாளர் (Secretary of State) பீட் ஹெக்செத் - பாதுகாப்புச் செயலாளர் (Defense Secretary) ஜேமிசன் கிரீர் - அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (US Trade Representative) ஸ்கொட் பெசென்ட் - நிதிச் செயலாளர் (Secretary of Treasury) உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில், பெய்ஜிங்கின் பிரம்மாண்டமான மண்டபத்தில் நடைபெற்ற கோலாகலமான வரவேற்பைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த டிரம்ப் "இது மிகப்பெரிய உச்சிமாநாடாக" இருக்கலாம் என்று வர்ணித்துள்ளார்
மேலும், பேச்சுவார்த்தைகள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஏற்படக்கூடிய "மோதல்" குறித்து ஷி ஜின்பிங் எச்சரித்திருந்ததாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |