ட்ரம்ப் தொடர்பான பாதுகாப்பு சர்ச்சை! FBI விசாரணை தீவிரம்
அமெரிக்க ஜனாதிபதியுடன் தொடர்புடைய பாதுகாப்பு வளாகத்தில் ஆயுதத்துடன் நுழைய முயன்ற ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, 21 வயது ஆண் ஒருவர் ஃப்ளோரிடாவில் உள்ள Mar-a-Lago ரிசார்ட் பாதுகாப்பு சுற்றுவட்டாரத்துக்குள் துப்பாக்கி மற்றும் சந்தேகப் பொருட்களுடன் நுழைய முயன்றுள்ளார்.
பாதுகாப்புப் பணியில் இருந்த United States Secret Service அதிகாரிகள் அவரை ஆயுதத்தை கீழே வைக்குமாறு எச்சரித்தனர். எச்சரிக்கையை பின்பற்றாமல் அவர் துப்பாக்கியை உயர்த்தியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து FBI மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. சம்பவத்தின் நோக்கம் இதுவரை உறுதி செய்யப்படாத பின்னணியில் குறித்த நபர் உளவாளியா? அல்லது ஈரானிய தரப்பினரா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |