வழக்கத்துக்கு மாறான செயற்பாடு : ஒபாமாவின் படத்தை தூக்கியெறிந்தார் ட்ரம்ப்
பல்வேறு அதிரடி செயல்களுக்குச் சொந்தக்காரரான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump), தற்போது மேலும் ஒரு அதிரடி செயலை செய்துள்ளார்.
இதன்படி வழக்கத்துக்கு மாறாக வெள்ளை மாளிகை படிக்கட்டு அருகே இருந்த முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின்(barack obama) படத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் தனது படத்தை வைத்துள்ளார் ட்ரம்ப்.
கொலைமுயற்சியில் இருந்து தப்பியபோது எடுக்கப்பட்ட படம்
கொலைமுயற்சியில் இருந்து தாம் தப்பியபோது எடுக்கப்பட்ட படத்தை ஓவியமாக வரையச் சொல்லி அதனை அந்த இடத்தில் அவர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) தொங்கவிட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அங்கிருந்த ஒபாமாவின் படம், 200 ஆண்டு வரலாற்றுச் சிறப்பைத் தாங்கி நிற்கும் வெள்ளை மாளிகையின் பிரமாண்ட நுழைவாயிலுக்கு எதிர்த்திசைச் சுவரில் மாட்டப்பட்டு உள்ளது.
வழக்கத்துக்கு மாறான செயற்பாடு
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப் செய்தது வழக்கத்தில் இல்லாதது என்று கூறப்படுகிறது. பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர் வெள்ளை மாளிகைச் சுவரில் படங்களைத் தொங்கவிடுவது நடப்பில் இல்லாத ஒன்று என்றும் தெரிவிக்கப்படுகிறது.
‘வெள்ளை மாளிகையில் புதிய கலைப்படைப்புகள்’ என்ற தலைப்பிட்டு ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள காணொளியில் ட்ரம்ப் புதிதாக மாட்டியுள்ள படத்தைக் காணமுடிந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
