மின் கட்டணத்தை அதிகரிக்க தீட்டப்படும் சதி - அம்பலமான பின்னணி
நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மின்சார பயனர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சூரிய மின்கலங்களை நிறுத்தி வைக்கும் நடவடிக்கையின் பின்னணியில் குறித்த சதித்திட்டம் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த விடயங்களை எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன (Asoka Abeygunawardana) தெரிவித்துள்ளார்.
நாட்டில் மின்சாரம் தடை
ஏப்ரல் 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3.00 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய மின்கல சக்தி இணைப்புகளை துண்டிக்குமாறு இலங்கை மின்சார சபை (CEB) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
புத்தாண்டு விடுமுறை காலத்தில் மின்சார நுகர்வு மிகவும் குறைவாக இருக்கும் சூழலில், வெயில் நிறைந்த நாட்களில் கூரை மீது உள்ள சூரிய மின்சக்தி அமைப்புகள் அதிக உற்பத்தியை ஏற்படுத்துகின்றன.
இது மின்கட்டமைப்பின் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக மின்சார சபை கூறுகிறது.
மின்சார தேவை கணிசமாக குறையும் போது மற்றும் வெயில் அதிகமாக இருக்கும் போது, இலங்கை மட்டுமல்லாமல் உலகின் எந்த நாடும் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மின்சார சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மின்சார பயன்பாடு மிகவும் குறைவு
பல தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் இந்த நாட்களில் மூடப்பட்டுள்ளதால், மின்சார பயன்பாடு மிகவும் குறைவாக உள்ளது. இதனால், பகல் நேரத்தில் அதிகப்படியான சூரிய மின்சக்தி மின்கட்டமைப்பிற்கு செல்கிறது என்று மின்சார சபை தெரிவிக்கிறது.
இந்த நிலைமையை சமநிலைப்படுத்த, மின்சார சபை நீர்மின்சாரம், நிலக்கரி மற்றும் பிற அனைத்து வெப்ப மின்சார உற்பத்தி நிலையங்களையும் மூடுவதாக அறிவித்துள்ளது.
ஆனால், நுகர்வோர் தங்கள் சூரிய மின்சக்தி அமைப்புகளை அணைக்கவில்லை என்றால், கூரை மீது உள்ள சூரிய மின்சக்தி அமைப்புகளிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சார சபையால் கட்டுப்படுத்த முடியாது.
இது தேசிய மின்கட்டமைப்பால் தாங்க முடியாத நிலையை உருவாக்கினால், ஒரு சிறிய பிழை கூட மின்னழுத்தம் அல்லது அதிர்வெண் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று மின்சார சபை எச்சரிக்கிறது.
பிரச்சினைக்கு முக்கிய காரணம்
குறித்த விடயம் தொடர்பில் எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன கருத்து தெரிவிக்கையில், சூரிய மின்கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிரதான அமைப்புடன் இணைக்கும் போது செயல்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு அமைப்பு இல்லாததே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
குறைந்த மின்சார தேவை உள்ள காலங்களில், சூரிய மின்கலங்கள் மூலம் பிரதான அமைப்பிற்குள் மின்சாரம் பாயும் போது, தேசிய அமைப்பின் சமநிலை சீர்குலைவதில்லை என எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், சூரிய மின்கலங்ளை நிறுத்தி வைக்கும் பின்னணியில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
