யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபம் : வடக்கு ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

Jaffna Sri Lanka India Northern Province of Sri Lanka
By Sathangani Apr 15, 2025 11:29 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இந்திய (India) அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை (Jaffna Thiruvalluvar Cultural Center), யாழ்ப்பாணம் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவதற்கான ஒழுங்குகளை முன்னெடுத்துள்ளதாக வடக்கு ஆளுநர் தெரிவித்தார்.

திருவள்ளுவர் கலாசார மண்டபத்தினை எவ்வளவு விரைவாக மாநகர சபையே பொறுப்பேற்று இயக்க முடியுமோ அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்படவேண்டும் என்றும் ஆளுநர் நா.வேதநாயகன் (N.Vethanayagan) வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று  (15.04.2025) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவரை விமர்சித்த கருணா : போராளிகளின் வளர்ச்சி விருப்பமில்லை என்று குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளின் தலைவரை விமர்சித்த கருணா : போராளிகளின் வளர்ச்சி விருப்பமில்லை என்று குற்றச்சாட்டு

இந்தியத் துணைத்தூதுவர்

இங்கு கருத்து வெளியிட்ட இந்தியத் துணைத்தூதுவர், ”இந்தக் கலாசார மண்டபத்தை இயக்குவதற்கான இணை முகாமைத்துவக் குழுவின் கூட்டம் 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நடத்தப்படவில்லை, அது எவ்வளவு விரைவாக இடம்பெறுகின்றதோ அதற்கு அமைவாகவே ஏனைய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க முடியும்.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபம் : வடக்கு ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை | Jaffna Thiruvalluvar Cultural Center Np Governor

எதிர்காலத்தில் இணை முகாமைத்துவக் குழுவை உள்ளூரை மையப்படுத்தியதாக உருவாக்குவது சிறப்பாக இருக்கும், அத்துடன் இந்தியத் தூதரகம் ஆலோசனை வழங்கும் ஒரு தரப்பாகவே எதிர்காலத்தில் இருக்கும்.

அத்துடன் கலாசார மண்டபத்தின் ஒவ்வொரு மாடிக் கட்டடத் தொகுதிக்குமான பல்வேறு விதமான முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையானது சாதகமானதொரு நிலைமை.” என தெரிவித்தார்.

வடக்கை கைப்பற்ற துடிக்கும் அநுர அரசு : தமிழ் மக்களிடம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கை கைப்பற்ற துடிக்கும் அநுர அரசு : தமிழ் மக்களிடம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கலந்துரையாடலில் கலந்துகொண்டோர்

மேலும் தற்போது இந்தியத் தூதரக அதிகாரிகளே பராமரித்து வரும் நிலையில் நிர்வாக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக யாழ். மாநகர சபையால் அதிகாரிகளை நியமிக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

மேலும், இணை முகாமைத்துவக் குழுவின் கூட்டத்தை விரைவாக கூட்டுவதற்கு ஏதுவாக மத்திய அரசாங்கத்தின் கலாசார அமைச்சுக்கு உடனடியாகக் கடிதம் அனுப்புமாறும் ஆளுநர் பணித்தார்.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபம் : வடக்கு ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை | Jaffna Thiruvalluvar Cultural Center Np Governor

கலாசார மண்டபம் யாழ். மாநகர சபையால் முழுமையாக இயக்கப்பட்ட பின்னர் அதில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பான திட்டமிடல்களை முன்னெடுக்கலாம் என இந்தியத் தூதரக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டில் பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டியுள்ள இலங்கை மின்சார சபை

கடந்த ஆண்டில் பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டியுள்ள இலங்கை மின்சார சபை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025