ஈரானின் முடக்கப்பட்ட நிதி அமெரிக்க விவசாயிகளுக்கே...! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
ஈரானின் முடக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் விடுவிக்கப்படும் பட்சத்தில் அந்தப் பணம் முழுவதையும் அமெரிக்காவிடம் இருந்து மட்டுமே உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய ஈரான் பயன்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அவ்விடம் இருந்து விடுவிக்கப்படும் பணம் அனைத்தும் ஈரானுக்கு அவசரமாகத் தேவைப்படும் உணவுப் பொருட்களை வாங்குவதன் மூலம் மீண்டும் எங்களிடமே திரும்பி வரவுள்ளது.
புதிய புரிந்துணர்வு
அங்கு 91 மில்லியன் (9.1 கோடி) மக்கள் உள்ளனர், அவர்களுக்கான உணவை அவர்களால் வழங்க முடியவில்லை.
எனவே நாம் தளர்த்தும் இந்த நிதி எங்களது நாட்டு விவசாயிகளுக்கே சென்றடையும்" என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தற்போதைய ஒப்பந்தங்களின் கீழ் அமெரிக்காவிடம் இருந்து விவசாய உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய எவ்வித கட்டாயமும் தங்களுக்கு இல்லை என்று ஈரானிய மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்பின் இக்கூற்றை ஈரான் தரப்பு மறுத்துள்ளமை இரு நாடுகளுக்கும் இடையேயான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |