பிரித்தானியாவை போருக்குள் இழுக்கும் ட்ரம்பின் நகர்வு! ஸ்டார்மர் கடும் விமர்சனம்
ஈரான் போர் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றுவதற்காகவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சிப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளையில், தான் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்டார்மர், “ட்ரம்பின் பல விமர்சனங்களும் என்னை நிலைப்பாட்டை மாற்ற அழுத்தம் கொடுப்பதற்காகவே என்று எனது சொந்தக் கருத்து. ஆனால், நான் அதற்கு இணங்கப் போவதில்லை.
இழுபட்டுச் செல்ல மாட்டோம்
ஈரான் போர் விவகாரத்தில், நாம் அதில் இழுபட்டுச் செல்ல மாட்டோம் என்று நான் கூறியுள்ளேன். ஏனெனில், அது பிரித்தானிய தேசிய நலனுக்கு உகந்ததல்ல என்று எனது மதிப்பீடு.

அந்த அழுத்தம் என்னைத் தடுமாறச் செய்யாது. எனது கொள்கைகளையோ அல்லது மதிப்பீடுகளையோ கைவிடச் செய்யாது” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களின் ஆரம்பக் கட்டத்தில் பிரித்தானிய இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்க ஸ்டார்மர் மறுத்திருந்தார்.
“வானத்திலிருந்து ஆட்சி மாற்றம்” (regime change from the skies) என்ற கொள்கையில் பிரித்தானிய நம்பிக்கை இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பாதுகாப்பு நோக்கங்கள்
பின்னர், பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டும் சில தளங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கினார்.
இந்நிலையில் ட்ரம்ப், ஸ்டார்மரின் இந்த அணுகுமுறையை பெரிய தவறு என்று விமர்சித்து வந்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைக்க கப்பல்களை அனுப்புமாறு கோரியும், பிரிட்டன் அதில் தாமதம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
போர் வெற்றி பெற்ற பிறகு சேர வேண்டாம் என்றும் கிண்டல் செய்திருந்தார்.எனினும், ஸ்டார்மர் தனது முடிவுகள் சட்டபூர்வமானவை மற்றும் பிரித்தானிய தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டவை என்று தொடர்ந்து வாதிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |