ட்ரம்ப் புறப்பட்ட விமானத்தில் கோளாறு! சிறிது நேரத்திலேயே தரையிறக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றிச் சென்ற ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தொழிநுட்ப கோளாறு காரணமாக மீண்டும் வாஷிங்டன் டிசிக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்ள வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்ட பிறகு சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, விமானம் செயிண்ட் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காசா அமைதி பேச்சுவார்த்தை
இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் வேறு விமானத்தில் சுவிட்சர்லாந்திற்குச் செல்வார் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Image Credit: Newsday
டொனால்ட் ட்ரம்ப் இன்று டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்ற உள்ளதுடன், நாளை டாவோஸில் காசா பகுதிக்கான அமைதி கவுன்சில் குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |