ஈரானில் களமிறங்கப்போகும் அமெரிக்கப்படைகள் :ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு
ஈரானின் அணு உலை எரிபொருளை மட்டுமல்ல, அணு ஆயுதங்களையும் தயாரிக்கப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்ற ஈரானுக்கு அமெரிக்க துருப்புக்களை அனுப்புவதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நிராகரிக்கவில்லை.
"எல்லாம் மேசையில் உள்ளது. எல்லாம்," என்று அவர் ஏபிசி நியூஸிடம் குறிப்பிட்டார்.
புதிய உச்ச தலைவர் எங்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்
ஈரானின் புதிய உச்ச தலைவர் "எங்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்" என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். இல்லையெனில் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு யார் தெரிவு செய்யப்பட்டாலும் "நீண்ட காலம் நீடிக்கப் போவதில்லை" என்றும் கூறினார்.

"என்னைப் போன்ற ஒரு ஜனாதிபதி உங்களிடம் இல்லாதபோது, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் நாங்கள் திரும்பிச் செல்ல வேண்டியதில்லை என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்," என்று அவர்குறிப்பிட்டார்.
பழைய ஆட்சியுடன் தொடர்புடைய ஒருவரை அங்கீகரிக்கத் தயாராக இருப்பேன் என்றும் கூறினார். "ஒரு நல்ல தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, நான் அதைச் செய்வேன்.என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |