இந்தியா நரகப் படுகுழி...! தரம் தாழ்ந்த கருத்து: ட்ரம்பால் வெடித்த புதிய சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியா குறித்து தெரிவித்த கருத்து பாரிய சர்ச்சையை ஏற்ப்டுத்தி உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் ஆற்றிய உரை ஒன்றில், இந்தியா குறித்துக் குறிப்பிடும் போது ‘நம் கிரகத்தில் இருக்கும் நரகப் படுகுழி’ என்ற சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார்.
இந்தியர்களை ‘நரகக் குழி’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தெரிவித்த கருத்துக்கள், “தகவலற்றவை, பொருத்தமற்றவை மற்றும் தரம் தாழ்ந்தவை” என இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது.
தரம் தாழ்ந்த கருத்துக்கள்
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
Our response to media queries regarding a social media post ⬇️
— Randhir Jaiswal (@MEAIndia) April 23, 2026
🔗 https://t.co/m9qhUcH9XP pic.twitter.com/bJJHid8g3i
அந்த அறிக்கையில், “நாங்கள் அந்த விமர்சனங்களையும், அதற்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட பிந்தைய அறிக்கையையும் கவனித்தோம்.
இந்தத் தரம் தாழ்ந்த கருத்துக்கள் வெளிப்படையாகவே எவ்வித தகவலுமற்ற மற்றும் பொருத்தமற்ற ஒன்றாகவே உள்ளன.
நீண்டகாலமாகப் பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா - அமெரிக்க உறவின் யதார்த்தத்தை இவை நிச்சயமாகப் பிரதிபலிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |