ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் விரிக்கும் வலை...! அதிர்ந்து கிடக்கும் மத்திய கிழக்கு
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே சமரசப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் சூழலில் அமெரிக்கத் தரப்பிலிருந்து வெளிவரும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆவேசமான கருத்துக்கள், ஈரானிய அரசாங்கத்தைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதுடன் நிலுவையில் உள்ள அமைதி உடன்படிக்கைகளைச் சீர்குலைக்கும் காரணியாக மாறியுள்ளன.
இராஜதந்திர ரீதியான மென்போக்கை விடுத்து, ஈரானின் அதிகார மையமான புரட்சிகரக் காவல்படையை (IRGC) நேரடியாகச் சீண்டும் வகையிலான அறிவிப்புகள், அவர்களை மீண்டும் ஒரு பாரிய இராணுவப் பதிலடிக்குத் தூண்டும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.
இவ்வாறான வெளிப்படையான அச்சுறுத்தல்கள் ஈரானின் சிவில் நிர்வாகத்தைப் பலவீனப்படுத்தி, நாட்டின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் இராணுவக் கட்டமைப்பின் கீழ் கொண்டு செல்லும் வியூகத்திற்குத் துணையாக அமைந்துவிடுகின்றன.
அமைதியை நிலைநாட்டும் நோக்கில் விடுக்கப்படுவதாகச் சொல்லப்படும் இந்த அறிவிப்புகள், யதார்த்தத்தில் மத்திய கிழக்கில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல போர்ப் பதற்றத்தை ஒருபோதும் தணியவிடாத சூழலை உருவாக்கியுள்ளன.
இது உட்பட தற்போதைய சர்வதேச அரசியல் களம் குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் நாள்! 17-ஆவது சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |