கூகுளுக்கு எதிராக கோடி ரூபாய் அபராதம்: ட்ரம்ப் கடும் எதிர்ப்பு
கூகுள் நிறுவனத்திற்கு எதிராக 30 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயனர்களின் தரவுகளை கூகுள் கண்காணிப்பதாக சுட்டிக்காட்டி ஐரோப்பிய ஒன்றியம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பயணிகளின் தரவு
இந்தநிலையில், பயணிகளின் தரவுகளை கூகுள் கண்காணிப்பதாக பரதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், குறித்த குற்றச்சாட்களுக்கு கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், விளம்பர தொழில்நுட்ப சந்தையில் தனது ஆதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியதற்காக கூகுள் மீது ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்துள்ளது.
இதனை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யப்போவதாக உறுதி அளித்துள்ளது.
மேல்முறையீடு
இதனால் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பில் டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாவது, “ஒன்றியம் இன்று மற்றொரு சிறந்த அமெரிக்க நிறுவனமான கூகுளை $3.5 பில்லியன் டொலர் அபராதம் விதித்து தாக்கியுள்ளது.
கூகுள் மற்றும் பிற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட பல அபராதங்கள், வரிகளை விட அதிகமானது.
அமெரிக்க மக்கள்
இது மிகவும் நியாயமற்றது, இதை அமெரிக்க மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
உதாரணமாக, ஆப்பிள் நிறுவனத்திற்கு 17 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
(இந்திய மதிப்பில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்), அவர்கள் கட்டாயத்தின் பேரில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
விதிக்கப்பட்ட பணம்
இப்படி அபராதமாக விதிக்கப்பட்ட பணத்தை அவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் இல்லையெனில், அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்ய பிரிவு 301 நடவடிக்கையைத் தொடங்க நான் கட்டாயப்படுத்தப்படுவேன்.
நான் முன்பே தெரிவித்தது போல், நாங்கள் இந்த பாரபட்சமான செயல்களை அனுமதிக்க மாட்டோம்.
கூகுள் கடந்த காலங்களில் 13 பில்லியன் டொலர்களை அபராதமாக செலுத்தி உள்ளது, அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது ? இப்படி அபராதம் விதிப்பது அவர்களுக்கு வருமானம் பெறுவதற்கான வழியாகிவிட்டது.
அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான இந்த நடைமுறையை ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நிறுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
