ஈரானுடனான போர்நிறுத்தம் குறித்த ட்ரம்பின் முடிவு...! வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு
ஈரானுடனான போர்நிறுத்த நீட்டிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறுதியில் அவரே தீர்மானிப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சில ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் குறித்து விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகை, ஈரானுடனான இந்த இராஜதந்திர நகர்வுகளில் ட்ரம்ப் மிகவும் நிதானமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு எவ்விதமான அவசர முடிவுகளும் எடுக்கப்படாது என்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு நலன்களுக்கு ஏற்பவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயரிடப்படாத வட்டாரங்கள்
செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் இது குறித்துத் தெரிவிக்கையில், “இன்று சில ஊடகங்களில் வெளியாவது போல ட்ரம்ப் எவ்விதமான உறுதியான காலக்கெடுவையும் விதிக்கவில்லை.
மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை மட்டுமே அவகாசம் இருப்பதாகச் சில பெயரிடப்படாத வட்டாரங்கள் கூறுவது முற்றிலும் உண்மையல்ல.

ட்ரம்ப் ஈரானிடமிருந்து ஒரு முறையான பதிலை எதிர்பார்க்கிறாரே தவிர, கால அவகாசம் கொடுத்து அவர்களை நெருக்கடிக்குள்ளாக்க விரும்பவில்லை.
அமைதி ஒப்பந்தத்திற்கான அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரானியத் தலைவர்களிடமிருந்து ஒரு ஒருங்கிணைந்த பதில் கிடைப்பதற்காக ட்ரம்ப் காத்திருக்கிறார்” என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் நாள்! 17-ஆவது சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |