ஈரானின் அணுசக்தி மூலப்பொருட்களை அழிக்கிறது அமெரிக்கா: டிரம்ப் அதிரடி முழக்கம்
ஈரானில் உள்ள அணுசக்தி மூலப்பொருட்களை (Nuclear Dust) அமெரிக்கா பெற்று அவற்றை அழிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்தச் சூழலில் அவர் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
செறிவூட்டல் தன்மை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சூழல் முற்றிலும் வழமைக்குத் திரும்பிய பின்னர் அமெரிக்கா ஈரானுக்குள் சென்று அங்கிருக்கும் அணுசக்தி மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அணுசக்தி மூலப்பொருட்களை ஈரானிலோ அல்லது அமெரிக்காவிலோ வைத்து செறிவூட்டல் தன்மையைக் குறைத்து (Downblend) முழுமையாக அழிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஈரானுடனும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் செயல்முறைகள் அனைத்தும் மிக விரைவாகவும் எளிதாகவும் சுமுகமாகவும் நடக்கும் என நம்புகிறோம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடக்காவிட்டால் எங்களிடம் இதற்கான இறுதி மாற்று வழி உள்ளது ஆனால் அதனை மீண்டும் ஒருமுறை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது என நம்புகிறேன்," என்றும் ட்ரம்ப் எச்சரிக்கும் தொனியில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |