வர்த்தக வரி விதிப்புக்கான காலக்கெடுவை நீட்டிக்கப்போவதில்லை : ட்ரம்ப் அதிரடி
அமெரிக்கா (United States) எந்த நாடுகளுடனும் வர்த்தகம் செய்ய தயார் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், அதற்கான கட்டாய வரி 10%, 25%, 30% அல்லது 50% வரையில் விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பிற நாடுகள் மீதான வர்த்தக வரி விதிப்புக்கான 90 நாள் காலக்கெடுவை நீட்டிக்க மாட்டோம் எவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகளிலிருந்து இறக்குமதி
இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளிலிருந்தே 57 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% முதல் 50% வரையான வரிகளை விதித்து, உலக வர்த்தகத்தில் பெரும் பரபரப்பை ட்ரம்ப் ஏற்படுத்தினார்.
இதற்கு பதிலடி அளித்த சீனா, மீது ட்ரம்ப் 125% வரி விதித்ததைத் தொடர்ந்து சீனா தனது அரிய வகை உலோகங்களின் ஏற்றுமதியை தடை செய்தது. இதனைக் கண்ட ட்ரம்ப் சிறிய அளவு வரி தளர்வை அறிவித்தார்.
இந்த வரி ஒப்பந்தங்களுக்கு இந்தியா, சீனா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 90 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
அந்த காலக்கெடு ஜூலை ஒன்பதாம் திகதி முடிவடைய உள்ள நிலையில் அந்த கால அவகாசத்தை நீட்டிக்கப்போவதில்லை என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்காவுடன் எந்த நாடுகள் எப்படி நடந்துகொள்கின்றன என்பதைப் பொறுத்து வரி வீதம் நிர்ணயிக்கப்படும்.
நல்லவிதமாக நடந்தால் சலுகை இருக்கும், இல்லை என்றால் கடுமையான வரி விதிக்கப்படும்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் அந்த நாடுகளுக்கு வர்த்தக அபராதங்கள் விதிக்கப்படும்” என அவர் தெவித்துள்ளார்.
இந்த 90 நாட்களில் 90 தனித்தனி ஒப்பந்தங்களை உருவாக்கவேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாகவும், இது 200 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் கடினம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
