ரஷ்ய எண்ணெய் நிறுத்தம் தான் உக்ரைன் போரின் முடிவு: ட்ரம்ப் அதிரடி
உக்ரைனில் (Ukraine) போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவிடம் (Russia) எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சீனாவுக்கு (China) 50 முதல் 100 வீத வரி விதிக்க வேண்டும் என நேட்டோ நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் போது, ரஷ்யா மீது பெரிய தடைகளை விதிக்க நான் தயாராக இருக்கிறேன்.
நேட்டோவின் வெற்றி
உங்களுக்குத் தெரியும், நேட்டோவின் வெற்றிக்கான அர்ப்பணிப்பு நூறு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
அத்தோடு, சிலர் ரஷ்ய எண்ணெயை வாங்குவது அதிர்ச்சியளிக்கின்றது, இது ரஷ்யா மீதான உங்கள் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது.
நேட்டோ நாடுகள் சீனா மீது கடுமையான வரிகளை விதிக்க வேண்டும், சீனாவின் மீது 50 வீதம் முதல் 100 வீதம் வரை வரிகளை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உக்ரைனுடனான போர்
ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போர் முடிவுக்கு வந்த பிறகு இந்த வரி முழுமையாக திரும்பப் பெறப்படும்.
இது போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன், நான் சொல்வது போல் நேட்டோ அவ்வாறு செய்தால் போர் விரைவில் முடிவடையும்.
அத்தோடு, உயிர்கள் அனைத்தும் காப்பாற்றப்படும் இல்லையென்றால் நீங்கள் எனது நேரத்தையும், அமெரிக்காவின் நேரத்தையும், சக்தியையும் மற்றும் பணத்தையும் வீணடிக்கிறீர்கள்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், சீனா மற்றும் இந்தியா உட்பட ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகள் மீது இரண்டாம் நிலைத் தடைகளை விதிக்க நேரிடும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
