பிரித்தானியாவில் இனவெறியின் உச்சக்கட்டம்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
பிரித்தானியாவில் (United Kingdom) இனவெறியால் சீக்கிய இளம்பெண் ஒருவர் தகாமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த 20 வயதான பெண்ணொருவரே இவ்வாறு தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உங்கள் நாட்டுக்கே திரும்பிச் செல் என தெரிவித்து அந்த பெண் மீது இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தகாதமுறை
அத்தோடு, குறித்த பெண்ணை தகாதமுறைக்கு உட்படுத்தி துன்புறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு அளித்துள்ளார்.
தேடும் நடவடிக்கை
இதையடுத்து அவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் நாளுக்குநாள் இனவெறித் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவில் சீக்கியப் பெண் மீதான இனவெறித் தாக்குதலுக்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
