பதவி நீக்க அச்சத்தில் ட்ரம்ப்...! இடைக்காலத் தேர்தலால் ஆபத்து
இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறாவிட்டால் நான் பதவி நீக்கம் செய்யப்படுவேன் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்ட பின் அவர் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்யும் நேரத்தில் இடைக்கால தேர்தல் நடப்பது வழக்கம்.
இந்த தேர்தல் என்பது அமெரிக்காவில் கீழ்சபையான காங்கிரசில் 435 இடங்களுக்கும் மற்றும் மேல்சபையான செனட்டில் உள்ள நூறு இடங்களில் மூன்றில் ஒரு பகுதியான 33 இடங்களுக்கும் நடக்கும்.
இடைக்காலத் தேர்தல்
டெனால்ட் ட்ரம்ப் 2024 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில், வரும் நவம்பரில் அங்கு இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது.
இது தொடர்பில் தன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “நவம்பரில் நடக்கும் இடைக்காலத் தேர்தலில் நாம் பெரும்பான்மையை இழந்தால் ஜனநாயகக் கட்சியினர் என்னை பதவி நீக்கம் செய்ய எந்தக் காரணத்தையும் கண்டுபிடிப்பார்கள்.
அதனால் கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 14 மணி நேரம் முன்