மறுத்தால் பேரழிவு - புடினுக்கு ட்ரம்ப விதித்த காலெக்கெடு: அதிரப்போகும் ரஷ்யா!
உக்ரைன் (Ukraine) போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா (Russia) உடன்பட மறுத்தால் பேரழிவு தரும் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்றையதினம் (12) அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டினுடனான சந்திப்பிற்குப் பிறகு பேசிய போது ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைனின் உடன்பாட்டை தொடர்ந்து, சாத்தியமான போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் தற்போது ரஷ்யாவுக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யாவிற்கு பேரழிவு
“நாங்கள் ரஷ்யாவிற்கு மிகவும் மோசமான விடயங்களைச் செய்யலாம். அது ரஷ்யாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும்.
ஆனால் நான் அதைச் செய்ய விரும்பவில்லை, ஏனென்றால் நான் அமைதியைக் காண விரும்புகிறேன், மேலும் ஏதாவது செய்ய நெருங்கி வருகிறோம்”, என்று ட்ரம்ப் அதன்போது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவிடமிருந்து போர்நிறுத்தத்தைப் பெற முடியும் என்று நம்புவதாகவும், அவ்வாறு செய்தால், இந்த கொடூரமான இரத்தக்களரியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 80 சதவீத வழி இதுவாக இருக்கும் என்று தான் நினைப்பதாகவும் ட்ரம்ப் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறனாதொரு பின்னணியில், ட்ரம்பின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் இந்த வார இறுதியில் ரஷ்யாவிற்கு செல்லவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
போர் நிறுத்தம்
செவ்வாயன்று சவுதி அரேபியாவில் அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை முடித்த பின்னர், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, போர் நிறுத்த திட்டத்தை ஆதரித்ததோடு, அமெரிக்கா ரஷ்யாவை அதை ஏற்றுக்கொள்ளும்படி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
எனவே தாங்கள் ஒப்புக்கொள்வதகவும், ரஷ்யர்கள் ஒப்புக்கொண்டால், அந்த தருணத்தில் போர் நிறுத்தம் செயல்படும் என்றும் ஜெலென்ஸ்கி, மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், சண்டை நின்றுவிடும் என்பதில் உக்ரைனியர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளமை குறிப்பிடத்தககது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்