வெடிக்கபோகும் மூன்றாம் உலகப்போர்: ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடக்கும் மோதல் காரணமாக கடந்த மாதம் மட்டும் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகின்றது.
இந்தப் போரை நிறுத்துவதற்கு ட்ரம்ப் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
அமைதி பேச்சுவார்த்தை
இருப்பினும், அடுத்த கட்ட முயற்சியாக போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “இந்த மோதலில் உயிரிழப்புகளை தடுக்க விரும்புகின்றோம்.

கடந்த மாதம் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்துள்ளனர், இதனை நிறுத்த வேண்டும் என விரும்புகிறோம்.
அதற்காக கடுமையாக உழைத்து வருகின்றோம், மோதல் தொடர்ந்து நடந்தால் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் இதனை முன்னரே கூறியிருந்தேன்.
அனைவரும் இதுபோன்று நடந்து கொண்டால் மூன்றாம் உலகப்போரைத் தவிர வேறு வழியில்லை இதனை பார்க்க யாரும் விரும்பவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |