இதுவே கடைசி: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பின்வாங்கிய ட்ரம்ப்
இம்முறை அமெரிக்க (US) ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் 2028 இல் மீண்டும் போட்டியிடமாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்பிற்கும் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசிற்கும் (Kamala Harris) கடுமையான போட்டி நிலவி வருகிறது.
கமலா ஹாரிஸ் முன்னிலை
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றிருந்தாலும், ட்ரம்ப் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இடை விடாது பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்.
இதேவேளை, அண்மையில் தனியார் தொலைகாட்சியொன்றின் விவாதமொன்றிலும் இவர்கள் இருவரும் கலந்துக் கொண்டிருந்த நிலையில், அதிலும் கமலா ஹாரிஸிற்கே பெருமளவான ஆதரவு கிட்டி இருந்தது.
இதுவே கடைசி
இந்த நிலையில், 2028 தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
அதன் போது ட்ரம்ப் கூறியதாவது, “2024-ல் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் முயற்சியில் தோல்வி அடைந்தால் 2028 இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. இதுவே கடைசி தேர்தலாக இருக்கும். இந்த முறை நிச்சயம் வெல்வேன் என நம்புகிறேன். ” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |