ட்ரம்பின் வெற்றியால் சடுதியாக உயரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு
அமெரிக்க(us) ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்(donald trump) வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின்(elon musk) சொத்துமதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
முன்னதாக 260 பில்லியன் டொலரில் இருந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு நேற்று(06) ஒரு நாளைக்குள் 20.5 பில்லியன் டொலர் அதிகரித்து 285.2 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 7.73 சதவீதமும், அவரது நிறுவனமான டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 13 சதவீதமும் உயர்ந்துள்ளது.
முன்னதாக ஜோ பைடன் வெற்றி பெற்றபோது ட்விட்டர் தளத்தில் டொனால்ட் ட்ரம்பின் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், ட்விட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிய எலான் மஸ்க், உடனடியாக ட்ரம்ப்பின் முடக்கப்பட்ட கணக்கையும் மீட்டார்.
அமைச்சுபதவி அல்லது ஆலோசகர் பதவி
தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய ட்ரம்ப், தான் மீண்டும் ஜனாதிபதியானால் எலான் மஸ்க்கிற்கு அமைச்சு பதவி அல்லது ஆலோசகர் பதவி வழங்குவேன் என பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |