உலகம் உற்று நோக்கும் வரலாற்றுச் சம்பவம் : டரம்ப் - உக்ரைன் ஜனாதிபதி முக்கிய சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்புடனான (Donald Trump) சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
வெள்ளை மாளிகையில் நேற்று (18) அமெரிக்க ஜனாதிபதிக்கும் உக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு விளாடிமிர் ஜெலென்ஸ்கி இந்த அறிக்கையை வெளியிட்டார்.
தேர்தலை நடத்தத் தயார்
ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வந்தால் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி கூறினார்.
மேலும் இந்த சந்திப்பில் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர், பிரிட்டிஷ் பிரதமர், பிரெஞ்சு ஜனாதிபதி, ஜெர்மன் ஜனாதிபதி, இத்தாலிய பிரதமர் மற்றும் நேட்டோவின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழு கலந்து கொண்டது.
குறித்த கலந்துரையாடலின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கும் இடையே ஒரு சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது, அச்சந்திப்பில் குறிப்பிடத்தக்க முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 14 மணி நேரம் முன்
