அமெரிக்காவில் வசிக்கும் உக்ரேனியர்களுக்கு பறந்த மின்னஞ்சலால் சர்ச்சை: வெளியானது அதிரடி பின்னணி
அமெரிக்காவில் (US) மனிதாபிமான திட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக வசிக்கும் பல உக்ரேனியர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான மின்னஞ்சல் தவறானது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வாரம் மனிதாபிமான திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிக்கும் பல உக்ரேனியர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதாக மின்னஞ்சல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த உக்ரேனியர்கள் 7 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், அவ்வாறு மறுத்தால் பெடரல் அரசாங்கம் அவர்களைக் கண்டுபிடிக்கும் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறான மின்னஞ்சல்
இந்நிலையில், இது தொடர்பில் பதிலளித்த அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர், “ இந்த மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டதாகும்.
உக்ரைன் மீது 2022 ஆம் ஆண்டு ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட பரோல் திட்டம் ரத்து செய்யப்படவில்லை.
இருப்பினும், குறித்த மின்னஞ்சலை எத்தனை உக்ரேனிய மக்கள் கைப்பற்றினார்கள் என்பது தெரிய வரவில்லை.
ட்ரம்ப்பின் நிர்வாகம்
ரஷ்யாவுடனான போரை அடுத்து உயிருக்கு பயந்து வெளியேறிய சுமார் 240,000 உக்ரைனியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக சட்ட அந்தஸ்தை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கடந்த மாதமே தகவல் வெளியாகியிருந்தது.” என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், தற்போது தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பியதாக அதிகாரிகள் தரப்பு கூறியிருந்தாலும், ட்ரம்ப் நிர்வாகம் எப்போது வேண்டுமானாலும் அப்படியான ஒரு முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 11 மணி நேரம் முன்
