ஜெட் விமான வேகத்தில் சுனாமி அலைகள்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை மணி!
சுனாமி அலைகள், ஜெட் விமான வேகத்தை போல் மணிக்கு சுமார் 700 கிலோமீட்டர் வரையான வேகத்தில் தாக்கக் கூடும் என வொஷிங்டன் பல்கலைக்கழகமும், NOAA பசிபிக் கடல் ஆய்வகமும் சேர்ந்த மூத்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
ஆய்வாளரின் கூற்றுப்படி, ஹவாய் மாநிலத்தின் வடக்குக் கரையோரத்தில் சுனாமி அலைகளால் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.
அதே நேரத்தில், அமெரிக்க மேற்குக் கடற்கரையில் அலைகள் குறைவாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடும் சேதங்கள்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “சுனாமி அலைகள் சாதாரண கடல் அலைகளைவிட முற்றிலும் மாறுபட்டவை. அவை மணிக்கு சுமார் 700 கிமீ (435 மைல்கள்) வேகத்தில் பயணிக்கின்றன, இது ஜெட் விமானத்தின் வேகத்திற்கு சமமானது.
இந்த அலைகள் கடலின் தாழ்வான பகுதிகளை அடையும் போது, அதன் சக்தி உயரமான அலைகளாக வெளிப்பட்டு, கரையோரங்களில் கடும் சேதங்களை ஏற்படுத்தும்.
மக்கள் கடற்கரையைத் தவிர்த்து, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார்.
விமான நிலையங்கள் முடக்கம்
இவ்வாறானதொரு பின்னணியில், ஹவாயின் மவுஇ தீவில் உள்ள கஹுலுயி (Kahului) விமான நிலையத்தில் இருந்து வரும் மற்றும் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஹவாய் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால், பல பயணிகள் விமான நிலையத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஹிலோ சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டிருக்கிறது.
ஹோனலுலு நகரில் உள்ள டேனியல் கே. இநோயே சர்வதேச விமான நிலையத்தில் சோதனைச் செயல்முறைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், உள்ளூர் மற்றும் கடல்கடந்த விமானங்கள் இடைவெளிக்குட்பட்டு இயக்கப்படுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் - திருவிழா
