இனிய பாரதியின் கைதில் மௌனம் காக்கும் முக்கிய சாட்சிகள்
இனிய பாரதியின் கைதையடுத்து தமிழ் தேசியம் மற்றும் தாயகம் என கதைத்தவர்கள் வாய் மூடியவர்களாக காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் (Chandra Nehru Chandrakanthan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வாறு பலர் வாய் மூடி மௌனமாக காணப்படுவதற்கான காரணம் வாய் திறந்தால் மக்களுக்கான நீதியை பெற்றுகொடுக்க வேண்டுமோ என்ற எண்ணம்.
இதுவரை அவர் கைது தொடர்பில் அம்பாறை மாவட்டத்தில் எவ்விதத்திலும் பேசப்படாத நிலையில், கொடியேற்றம் மற்றும் ஏனைய நிகழ்வு என மக்களை ஒன்றுதிரட்டாது பயணிக்கின்றனர்.
காரணம், நமக்கு எதற்கு பிரச்சினை என்ற ரீதியில் அவர்கள் நகர்கின்றனர், தனித்தனியாக தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என தெரிவிக்கும் யாரும் சாட்சி சொல்ல முன்வருவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் அரசியல் களம், அரசாங்கத்தின் அடுத்த கட்டம், பிள்ளையானின் கைதியின் பின்னணி மற்றும் அவருடைய சாக்களின் கைதுகளின் முக்கிய பின்னணி, இதனை தொடர்ந்து சிக்கப்போகும் அரசியல் தலைமைகள் மற்றும் அவர்களின் அரசியல் எதிர்காலம் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
