தமிழர்களின் சுயாட்சி கனவு: பின்வாங்கும் அநுர அரசு
தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலைமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முயற்சியை எடுத்திருப்பதாக எவ்விதத்திலும் தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் பிரச்சினைகளை சமஷ்டி அடிப்படையில் தீர்ப்பதற்கான அதிகாரம் என்பது எங்களுக்குரியது.
தமிழ் மக்கள் தங்களை ஆட்சி செய்யும் ஒரு சுயாட்சி அதிகாரத்திற்காக நாங்கள் காத்திருப்பதுடன் இதற்காக அரசுக்கு பூரண ஆதரவளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
ஆனால், தற்போதைய அரசாங்கம் அணைவரையும் ஒன்றினைக்க தயார் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ( Ramalingam Chandrasekar) தெரிவித்த மேலதிக கருத்துக்கள் கீழுள்ள காணொளியில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
