இலங்கையில் அதிகரித்துள்ள காசநோயாளிகள்
இலங்கையில் இந்த ஆண்டு காசநோயாளிகள் 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் தெரிவிக்கிறது.
நுரையீரல் காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமூக சுகாதார நிபுணர் திருமதி நிசாயா காதர் தெரிவித்தார்.
இந்த வருடத்திற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம்
காசநோய் மற்றும் மார்பு நோய் எதிர்ப்பு தொடர்பான இந்த வருடத்திற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் இம்மாதம் 29ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்த வருடத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் பிரதான இலக்கானது இலங்கை மக்களுக்கு கல்வியறிவித்தல் மற்றும் 2035 ஆம் ஆண்டளவில் காசநோயாளிகளின் இறப்பு வீதத்தை 95 வீதமாகக் குறைப்பது மற்றும் காசநோயாளிகளின் எண்ணிக்கையை 100,000 சனத்தொகைக்கு 10 ஆகக் குறைப்பது ஆகும்.
தேசிய தினத்தை முன்னிட்டு மாகாண, மாவட்ட, பிராந்திய மற்றும் சமூக மட்டங்களில் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை திட்டங்களை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |