கனடிய பிரஜைகள் விசா இன்றி பிரவேசிக்க அனுமதித்த வெளிநாடு
இதுவரை காலமும் துருக்கிக்கு பயணம் செய்யும் கனடியர்கள் விசா பெற்றுக்கொண்டே பயணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது விசேட சலுகையொன்றினை கனடிய பிரஜைகளுக்கு அந்நாடு வழங்கியுள்ளது.
அவ்வகையில், கனடிய பிரஜைகள் துருக்கிக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசா
இதன்படி 90 நாட்களைக் கொண்ட சுற்றுலா விசாவின் ஊடாக இவ்வாறு துருக்கி நாட்டுக்கு பயணம் செய்ய முடியும்.
சுற்றுலா நோக்கில் பயணம் செய்யும் கனடியர்கள் விசா இன்றி துருக்கி செல்ல முடியும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் துருக்கிக்கு பயணங்களை மேற்கொள்வதற்கு, கனடியர்கள் 60 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது, கனடாவிற்கான துருக்கி தூதரகம் இந்த விசாவை வழங்கி வந்தது.
மாணவர், மருத்துவர் மற்றும் தொழில்களுக்கான விசா
எனினும் மாணவர், மருத்துவர் மற்றும் தொழில்களுக்கான விசாவை பெற்றுக்கொள்ள விரும்பும் கனடியர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா தொடர்பிலான விபரங்களை பெற்றுக்கொள்ளவும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும் மூன்றாம் தரப்பு இணைய தளங்களை நம்ப வேண்டாம் என கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |