இஸ்தான்புலில் விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு இலங்கைத் தூதரகம் உதவி
துருக்கியின் இஸ்தான்புலில் இலங்கைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கடந்த 9ஆம் திகதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய 29 பேரில் 09 பேர் தற்போது இஸ்தான்புலில் உள்ள மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற வேளை மீதமுள்ள இருபது பேரும் மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அன்றே வீடு திரும்பியுள்ளனர்.
சிறிலங்காவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இன்று (12) வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேற்கண்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன,
“துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் அந்த நிறுவனத்துடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மருத்துவமனை உதவியாளர்கள்
காயமடைந்தவர்களின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக இலங்கையர்களை மருத்துவமனை உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மற்றும் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் விபத்துக்கு உள்ளானவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்த துருக்கியின் வெளியுறவு அமைச்சகத்துடனும் துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது.
இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.
விபத்துக்குள்ளானோரின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.