துருக்கிய நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் மீட்பு
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் புதையுண்ட கானா சர்வதேச கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு (Christian Atsu) உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அவர் திங்களன்று துருக்கியின் Hatay மாகாணத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கினார்.
Hatayspor செய்தித் தொடர்பாளர் Mustafa Ozat, இப்போது கிறிஸ்டியன் அட்சு கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
விளையாட்டு பணிப்பாளரை காணவில்லை
ஆனால், கிளப்பில் உள்ள மற்றொரு முக்கிய நபரரான விளையாட்டு பணிப்பாளர் டேனர் சாவுட் துரதிர்ஷ்டவசமாக இன்னும் காணவில்லை என கூறியுள்ளார்.
31 வயதான அட்சு, செல்சியாவிலிருந்து கடனில் நியூகேஸில் யுனைடெட் மற்றும் எவர்டனுக்காக இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடி, செப்டம்பரில் துருக்கியின் Hatayspor கிளப்பில் சேர்ந்தார். அவர் கடைசியாக 2019-ல் கானாவுக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அதிகாரப்பூர்வமாக சர்வதேச கால்பந்திலிருந்து அவர் ஓய்வு பெறவில்லை. அவர் கானாவினால் சர்வதேச அளவில் 65 முறை பட்டம் பெற்றுள்ளார்.
