சுரங்கத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு..! 22 பேர் பலி: 100 மேற்பட்டோர் பூமிக்கடியில் சிக்கி தவிப்பு
விபத்து
துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து விபத்து ஏற்பட்ட இடத்தை துருக்கி அதிபர் எர்டோகன் பார்வையிட்டுள்ளார்.
வடக்கு துருக்கியின் பார்டின் (Bartin) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்திலேயே குறித்த திடீர் வெடிப்பு ஏற்பட்டதாகவும் 22பேர் உயிரிழந்த நிலையில் பலர் சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
300 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் பலர்

குண்டுவெடிப்பின் போது சுமார் 110 பேர் வரை சுரங்கத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், அதில் பலர் மேற்பரப்பில் இருந்து 300 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயங்கர வெடிப்பிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்புப் பணியாளர்கள் சுரங்கத்தின் பாறைகளை தோண்டி உயிர் பிழைத்தவர்களைச் சென்றடைய முயன்று வருவதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எட்டு சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்க வெடிப்பில் இருந்து தப்பிச் சென்றதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வெடிப்பு விபத்தில் இருந்து தப்பித்த நபர்
?#UPDATE: Death toll rises to 22 people at the mine explosion in #Bartın, says #Turkey health minister pic.twitter.com/DfKebNN6Dz
— Breaking News 24/7 (@Worldsource24) October 14, 2022
விபத்து தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில், நிலக்கரி சுரங்கங்களில் வெடிக்கும் கலவையை உருவாக்கும் மீத்தேன், ஃபயர் டேம்பில் வெடித்ததற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக துருக்கியின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிப்பு விபத்தில் இருந்து தப்பித்த நபர்களில் ஒருவர், தூசி மற்றும் புகை இருந்ததால் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.