தவெகவின் முதல்வர் வேட்பாளர் விஜய் : செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக வெற்றி கழகத்தின் (TVK) முதல்வர் வேட்பாளராக விஜயை (Vijay) தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் (Chennai) உள்ள பனையூர் கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, கட்சியின் பணிகள், கூட்டணி அதிகாரம், முதல்வர் வேட்பாளர்கள் ஆகியவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல்வர் வேட்பாளர்
அதன்படி, தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்றும், கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, கட்சியின் பணிகள், கூட்டணி அதிகாரம், முதல்வர் வேட்பாளர்கள் ஆகியவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு முன்னதாக, ஆகஸ்ட் மாதத்தில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் எனவும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
TVK மாநில செயற்குழு கூட்டம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |