மொட்டு கட்சியின் முன்னாள் அமைச்சர் கைது : நீதிமன்றின் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் இன்று (04) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மொட்டு கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிரடி கைது
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன (S. M. Chandrasena) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய கூட்டாளிகளுக்கு ரூ.25 மில்லியன் மதிப்புள்ள சோள விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
