ஏமாற்றத்தில் முடியும் விஜய்யின் முதல்வர் கனவு.! தவெக தொண்டர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சித் தகவல்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரும்பான்மையை நிரூபிப்பதில் நீடிக்கும் இழுபறி காரணமாக நாளை முதல்வராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆட்சியமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாத நிலையில், ஆளுநர் ஆர்லேகர் இதுவரை விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை.
ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு விஜய்யின் பலம் 116 ஆக இருந்த நிலையில், இன்று(08) மாலை விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவைக் கோரிவிட்டு அவர் மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்தித்தார்.
பதவியேற்பு நிறுத்தம்
எனினும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தனது ஆதரவு வழங்க மறுத்த நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் இரண்டு இடங்கள் குறைவாகவே உள்ளன.
இதன் காரணமாக, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவிருந்த பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

பதவியேற்பு குறித்து ஆளுநரிடமிருந்து முறையான அழைப்பு வராததால், நாளை நடைபெறவிருந்த பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் உறுப்பினர்கள், தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும், நாளை(09) யாரும் சென்னை நேரு விளையாட்டரங்கிற்கு வர வேண்டாம் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறும் அவசரத் தகவல்களை அனுப்பி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |